ஆல்ட்காயின்

ஆல்ட்காயின் (Altcoin) என்பது பிட்காயின், தவிர உள்ள அனைத்து எண்ணிம நாணயங்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். பிட்காயின் அல்லாத நாணயங்கள், ஆங்கிலத்தில் ஆல்டர்நேட்டிவ் காயின் என்று வழங்குவர், அதன் சுருக்கமே ஆல்ட்காயின் ஆகும். பொதுவான பண்புகள் பிட்காயினை ஒத்து இருக்கும்; சில பண்புகள் வேறுபடும். மூல நிரல்கள் சில நேரங்களில் பிட்காயினுடையதாகவோ அல்லது சுயமாக உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும்.

எடுத்துக்காட்டுகள்

ஈத்தரீயம், லைட்காயின், மோனேரோ, ரிப்பிள், ஈத்தரீயம் க்ளாசிக் உள்ளிட்டவை பிரபலமான ஆல்ட்காயின்கள் ஆகும்.

உசாத்துணை

  1. "ஆல்ட்காயின் என்றால் என்ன? (ஆங்கில மொழியில்)". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
  2. "Want to Keep Up With Bitcoin Enthusiasts? Learn the Lingo". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
  3. "Which Digital Currency Will Be the Next Bitcoin?". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
  4. "altcoin". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.