இட்சாக் ரபீன் Yitzhak Rabin | |
---|---|
இஸ்ரேலின் 5வது பிரதமர் | |
பதவியில் ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995 | |
முன்னையவர் | இட்சாக் சமீர் |
பின்னவர் | சிமோன் பெரெஸ் |
பதவியில் ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977 | |
முன்னையவர் | கோல்டா மேயர் |
பின்னவர் | மெனாக்கெம் பெகின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்) | 1 மார்ச்சு 1922
இறப்பு | நவம்பர் 4, 1995 டெல் அவீவ், இஸ்ரேல் | (அகவை 73)
அரசியல் கட்சி | கூட்டமைப்பு, தொழிற் கட்சி |
துணைவர் | லியா ரபீன் |
பிள்ளைகள் | டாலியா யுவால் |
இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: ⓘ, மார்ச் 1, 1922 – நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.