கண்டுபிடிப்பு
| |||||||
---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் ஹேர்ச்செல் | ||||||
கண்டுபிடிப்பு நாள் | ஆகத்து 28, 1789 | ||||||
பெயர்க்குறிப்பினை
| |||||||
வேறு பெயர்கள் | சனி II | ||||||
அரைப்பேரச்சு | 237,948 கிமீ | ||||||
மையத்தொலைத்தகவு | 0.004 7 | ||||||
சுற்றுப்பாதை வேகம் | 1.370 218 நாட்கள் அல்லது 118,386.82 செக் | ||||||
சாய்வு | 0.019° (சனியின் நிலநடுக்கோடுக்கு) | ||||||
இது எதன் துணைக்கோள் | சனி (கோள்) | ||||||
சிறப்பியல்பு
| |||||||
பரிமாணங்கள் | 513.2×502.8×496.6 கிமீ | ||||||
சராசரி ஆரம் | 252.1 ± 0.1 கிமீ (0.0395 பூமிகள்) | ||||||
நிறை | (1.080 22 ± 0.001 01)×1020 கிகி (1.8×10-5 பூமி) | ||||||
அடர்த்தி | 1.609 6 ± 0.002 4 கி/சமீ3 | ||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.111 மீ/செ2 (0.011 3 g) | ||||||
விடுபடு திசைவேகம் | 0.239 கிமீ/செ (860.4 கிமீ/ம) | ||||||
சுழற்சிக் காலம் | ஏககாலச் சுழற்சி | ||||||
அச்சுவழிச் சாய்வு | சுழியம் | ||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் |
| ||||||
தோற்ற ஒளிர்மை | 11.7 | ||||||
வளிமண்டலம்
| |||||||
பரப்பு அழுத்தம் | trace, significant spatial variability | ||||||
வளிமண்டல இயைபு | 91% நீர் ஆவி 4% நைதரசன் 3.2% காபனீரொக்சைட்டு 1.7% மெத்தேன் |
என்சலடசு (Enceladus) என்பது சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் (நிலா) ஆகும். இது 1789 ஆம் ஆண்டில் வில்லியம் ஹேர்ச்செல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. வொயேஜர் விண்கலங்கள் இரண்டு 1980களின் ஆரம்பத்தில் இதற்கு அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணைக்கோள் பற்றிய அறிவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனாலும், இதன் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர் இருப்பது அறியப்பட்டிருந்தது. வொயேஜர் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களின்படி, இத்துணைக்கோளின் விட்டம் 500 கிமீ ஆகும். இது டைட்டான் என்ற சனியின் மிகப்பெரிய துணைக்கோளை விட 10 மடங்கு குறைவானதாகும். இதன் மேற்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் அனைத்தையும் இது மீளத் தெறிக்கிறது.
2005 ஆம் ஆண்டில், நாசாவின் கசினி விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது.
நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை கசினி விண்ணுளவி கண்டுபிடித்துள்ளதாக 2011 சூன் மாதத்தில் நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)