உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | சூலை 24, 2013 |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
தளம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
மென்பொருள் வகைமை | Online service |
இணையத்தளம் | Google Play Games on the Play Store |
கூகுள் பிளே கேம்ஸ் (Google Play Games) என்பது கூகுள் நிறுவனத்தால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இணையதள விளையாட்டு மற்றும் மென்பொருள் மேம்பாட்டு கருவிப் பெட்டி ஆகும். இதில்விளையாடுபவர்களின் சுய விவரங்கள், உள்ளகச் சேமிப்பு அவர்களின் சாதனைகள் மற்றும் பலநபர்கள் ஒரே நேரத்தில் விளையாடுதல் போன்ற செயலியல்புகளைக் கொண்டுள்ளது.
கூகுள் பிளே கேம்ஸ்சேவையின் அரிவிப்பானது 2013 ஆம் ஆண்டில் நடபெற்ற கூகுள் ஐ ஓ மேம்பாட்டாளர் மாநாட்டில் வெளியானது. இதற்கான நகர்பேசி பதிப்பானது சூலை 24, 2013 இல் வெளியானது. மேலும் திரையினை நிகழ்படமாக சேமித்தல் விளையாடுபவர்களின் இனங்காட்டி (கணினியியல்) போன்ற மேம்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளன.