செயற்கை புல்தரை

செயற்கை புல் தரை

செயற்கை புல்தரை (Artificial Turf) என்பது இயற்கையான புல் போல் தோற்றமளிக்கும் செயற்கை இழைகளாலான மேற்பரப்பாகும். இது பெரும்பாலும் விளையாட்டிற்கான அரங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இப்போது குடியிருப்பு புல்வெளிகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை புல்தரை பயன்படுத்துவதற்கான மிக முக்கிய காரணம் அதன் பராமரிப்பில் உள்ள எளிமையேயாகும். செயற்கையான தரைப்பகுதி விளையாட்டு போன்ற கனரகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை தரைப்பகுதி பயன்படுத்தும்பெழுது நீர்ப்பாசனம், கத்தரித்தல் தேவைப்படாது. முழுவதும் மூடப்பட்ட மற்றும் ஓரளவு மூடப்பட்ட விளையாட்டு அரங்கங்களில் இயற்கையான புல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான சூரிய ஒளி பெறுவது மிகவும் கடினமாக இருப்பதால் இவ்வரங்கங்களில் செயற்கை புல்தரை தேவைப்படலாம். ஆனால், செயற்கை புல்தரையானது குறைந்த ஆயுட்காலம், முறையாக தூய்மைப்படுத்துதல், பெட்ரோலியம் பயன்பாடு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவலையளிக்கக்கூடிய அம்சங்கள் ஆகிய குறைபாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 1960 இல் புதிதாக கட்டப்பட்ட ஆஸ்ரோடொபில் பயன்படுத்தப்பட்டபோது கணிசமான கவனத்தை ஈர்த்தது. இந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு மான்சாண்டோவால் உருவாக்கப்பட்டது. மேலும் ஆஸ்ட்ரோ டர்ப் என்றும் அழைக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பொது வர்த்தக சின்னமாக ஆனது. ஆஸ்ட்டோ டர்ப் ஒரு பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாக உள்ளது. 1960களில் முதல் தலைமுறை தரை அமைப்புகள் (அதாவது குறுகிய பைன் இலை போல்) ஊடுருவல்கள் இல்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை செயற்கை தரை அமைப்புகள் நீண்ட இழைகள் மற்றும் மணல் ஊடுருவல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்