செயின்ட் இலாரன்சு ஆறு

செயின்ட் இலாரன்சு ஆறு
புளோவ் செயின்ட்-லாரன்ட், புளோவ் செயின்ட்-லாரன்ட், செயின்ட்-லாரன்சு ஆறு, புனித-லாரன்ட் ஆறு
River
அலெக்சாண்ட்ரியா விரிகுடா அருகே செயின்ட் இலாரன்சு ஆறு
பெயர் மூலம்: உரோமையின் புனித இலாரன்சு
நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
மாகாணங்கள் ஒன்றாரியோ, கியூபெக்
மாநிலம் நியூ யோர்க்
உற்பத்தியாகும் இடம் ஒன்றாறியோ ஏரி
 - அமைவிடம் கிங்சுட்டன், ஒன்றாறியோ / வின்சென்ட் முனை, நியூ யோர்க்
 - உயர்வு 74.7 மீ (245 அடி)
கழிமுகம் புனித லாரன்சு வளைகுடா / அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 500 கிமீ (310 மைல்) கழிமுகத்தைத் தவிர்த்து. கனடா. உள்ளடக்கினால் 1200 கிமீ.
வடிநிலம் 13,44,200 கிமீ² (5,19,000 ச.மைல்)
Discharge for சகுயெனேய் ஆற்றைவிட குறைவானது
 - சராசரி
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்

செயின்ட் இலாரன்சு ஆறு ( Saint Lawrence River, பிரெஞ்சு மொழி: Fleuve Saint-Laurent வட அமெரிக்க கண்டத்து நடுமையிலுள்ள பெரிய ஆறு. செயின்ட் இலாரன்சு ஆறு கிட்டத்தட்ட வடக்கு-கிழக்காக ஓடுகிறது. இது அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பேரேரிகள் வடிநிலத்தின் முதன்மை வெளியேற்று நீர்வழியாகவும் உள்ளது. இது கனடிய மாகாணங்களான கியூபெக், ஒன்றாரியோ வழியாகவும் கனடா-ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு எல்லையின் கனடிய ஒன்றாறியோவிற்கும் ஐக்கிய அமெரிக்க மாநிலம் நியூ யோர்க்கிற்கும் இடைப்பட்டப்பகுதியிலும் பாய்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே வணிகமய செயின்ட் இலாரன்சு கடல்வழி கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடல்வழியின் செயின்ட் இலாரன்சு ஆற்றுப்பகுதி தொடர்ச்சியான கால்வாய் அல்ல; இது ஆற்றினுள் பல பயணிக்கக்கூடிய வழிகள் அடங்கியதாகும். ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, ஆற்றங்கரையில் பல கால்வாய்கள் மூலம் விரைவோட்டப்பகுதிகளும் அணைகளையும் தவிர்க்கப்படுகின்றன. கனடாவில் பல தடுப்பணைகளை செயின்ட் இலாரன்சு கடல்வழி மேலாண்மை நிறுவனம் பராமரிக்கிறது; அமெரிக்கப் பகுதியில் செயின்ட் இலாரன்சு கடல்வழி மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இதனை "பெருவழி H2O" என விளம்பரப்படுத்துகின்றன. மொண்ட்ரியாலிலிருந்து அத்திலாந்திக்கு வரையிலான ஆற்றுப்பகுதி கனடிய நிர்வாகத்தில் கியூபெக் துறைமுக கனடா போக்குவரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Natural Resources Canada, Atlas of Canada - Rivers பரணிடப்பட்டது 2006-05-20 at the வந்தவழி இயந்திரம்
  2. Benke, Arthur C.; Cushing, Colbert E. (2005). Rivers of North America. Academic Press. பக். 989–990. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-088253-3. https://books.google.com/books?id=faOU1wkiYFIC&pg=PA989. பார்த்த நாள்: 21 March 2011. 
  3. "Archived copy". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Lawrence River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.