சோதி விண்மீன்

சோதி விண்மீன்

சோதி விண்மீன் என்பது வட வானக்கோளத்தில் உள்ள லைரா விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஆல்பா லைரா விண்மீனாகும். இதன் வல ஏற்றம் 18 மணி 36 நிமிடம்; நடுவரை விலக்கம் +38°.46; இது வானத்தில் தோன்றும் ஒளிமிக்க வின்மீன்களில் நான்காம் விண்மீன். இதன் பார்வை அல்லது தோற்றப் பொலிவுப் பருமை 0.14. இதன் ஒளிர்மை 0.5. சோதி விண்மீன் சூரியனிலிருந்து 27 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது A நிறமாலை வகையைச் சார்ந்ததாகும். ஐந்தாம் ஒளிர்மை வகையைச் சார்ந்தது, சூரியனின் பொருண்மையைப் போல் மூன்று மடங்கு பொருண்மையுடையது. நீலம் கலந்த வெண்ணிறமுடையது. இதன் ஒளி சூரியனின் ஒளியைப் போல் 50 மடங்கு மிகுதி. இதன் விட்டம் 32 x 10 6 கி.மீ . புறப்பரப்பு வெப்பம் சூரியனின் வெப்பத்தைவிட இரு மடங்கானது. புவியின் சம இரவுப் புள்ளிகளின் தலையாட்டம் காரணமாக இவ்விண்மீன் 14000 ஆண்டுகளில் புவியின் துருவ விண்மீனாகத் தோன்றும் எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்

  1. "சோதி விண்மீன்". அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 12 சூலை 2017.