செப்டம்பர் 2011 இல் திறந்த வெளி நூலக வலைத்தள முகப்புப் பக்கம் | |
வலைத்தள வகை | எண்மிய நூலகப் பட்டியல் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
வருவாய் | நன்கொடை |
மகுட வாசகம் | ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வலைப்பக்கம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | இலவசம் |
வெளியீடு | 2006 |
அலெக்சா நிலை | 16,427 (April 2014) |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் உள்ளது |
உரலி | openlibrary.org |
திறந்த வெளி நூலகம் (Open Library) என்பது "பதிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்தை" உருவாக்கும் நோக்குடன் செயல்படும் இணையத் திட்டம் ஆகும். இதனை ஏரன் சுவோற்சு, புரூசுட்டர் கேல் மற்றும் பலர் தொடங்கினர். இது ஒரு இணைய ஆவணகத் திட்டம் ஆகும். இத்திட்டத்துக்கான ஒரு பகுதி நிதியை கலிப்போர்னியா அரசு நூலகமும் கேல்/ஆசுட்டின் அறக்கட்டளையும் வழங்கியுள்ளன.
இத்திட்டம் பல்வேறு பொதுக்கள நூல்களையும் தற்போது அச்சில் இல்லாத நூல்களையும் இணையத்தில் படிக்கும் வசதியைத் தருகிறது.