உயிரியல் வகைப்பாட்டில், ஒரு துணைக்குடும்பம் (Subfamily)(இலத்தீன் : துணைக் subfamilia , பன்மை subfamiliae ) என்பது ஒரு துணை (இடைநிலை) பெயரீட்டுத் தரநிலை ஆகும். இது குடும்பத்திற்கு அடுத்த நிலையாகும். ஆனால் பேரினத்தினை விட உயர் நிலையாகும். நிலையான பெயரிடல் விதிகளின்படி துணை குடும்ப தாவரவியல் பெயர்களுடன் "-ஓய்டேயே", மற்றும் விலங்கியல் பெயர்களை "-இனே" உடன் முடிக்கின்றன.
உதாரணம்:
வீட்டுப்பூனைபெலிசு கேட்டசு பெலிடே என்ற குடும்பத்தின் கீழ் பெலினே எனும் துணைக் குடும்பத்தினைச் சார்ந்தது.
மேற்கோள்கள்
↑ 1.01.1International Commission on Zoological Nomenclature (1999). "Article 29.2. Suffixes for family-group names". International Code of Zoological Nomenclature (Fourth ed.). International Trust for Zoological Nomenclature, XXIX. p. 306. Archived from the original on 2019-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.