தென் சிலாவிய மொழிகள்

தென் சிலாவிய மொழிகள்

தென் சிலாவிய மொழிகள் (South Slavic languages) என்பது சிலாவிய மொழிக் குடும்பத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்றாகும். சிலாவிய மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். தென் சிலாவிய மொழிகள் ஏறத்தாழ 30 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றன. இதில் பால்கர்களே இம்மொழிகளை பரவலாக பேசுகின்றனர். இம்மொழிகளுள் முதன்முறையாக எழுதப்பட்ட மொழி தெசலோனிக்க மொழி ஆகும்.