தெலொசு

டெலோஸ்
உள்ளூர் பெயர்: Δήλος
டெலோசின் பொதுவான தோற்றம்
டெலோஸ் is located in கிரேக்கம்
டெலோஸ்
டெலோஸ்
புவியியல்
ஆள்கூறுகள்37°23′36″N 25°16′16″E / 37.39333°N 25.27111°E / 37.39333; 25.27111
தீவுக்கூட்டம்சைக்லேட்ஸ்
பரப்பளவு3.43 km2 (1.32 sq mi)
உயர்ந்த ஏற்றம்112 m (367 ft)
உயர்ந்த புள்ளிMt. Kynthos
நிர்வாகம்
கிரேக்கம்
மக்கள்
மக்கள்தொகை24
அடர்த்தி6,8 /km2 (176 /sq mi)
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிCultural: ii, iii, iv, vi
உசாத்துணை530
பதிவு1990 (14-ஆம் அமர்வு)

டெலொஸ் தீவு (Delos) என்பது சைக்லேட்ஸ் தீவுக்கூட்டத்தின் மையத்திற்கு அருகில் உள்ள மைக்கோனோஸ் அருகே உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் மிக முக்கியமான தொன்மவியல், வரலாற்று, தொல்லியல் தளங்களில் ஒன்றாகும். தீவில் நடந்த அகழ்வாய்வுகள் மத்தியதரைக் கடலில் மிகவும் முக்கியமானவை. எபோரேட் ஆஃப் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் சைக்லேட்ஸின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல கலைப்பொருட்கள் டெலோஸ் தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் ஏதென்ஸின் தேசிய தொல்லியல் அருங்காட்சியகம் போன்றவற்றி்ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பியன் கிரேக்கத் தொன்மவியலின் படி அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு ஆகியோரின் பிறப்பிடமாக இத்தீவு கருதப்படுகிறது. டெலோஸ் தீவு சுமார் ஒரு ஆயிரமாண்டு காலத்திற்கு ஒரு புனித இடமாக இருந்தது. இதன் புனிதத் துறைமுகத்தில் இருந்து, அடிவானம் மூன்று கூம்பு வடிவ மேடுகளைக் கொண்டதாக உள்ளது. அவை இறைவியின் புனித நிலப்பரப்புகளை அடையாளம் காட்டுவதாக (இறைவியின் பெயர் ஏதெனா என்று கணிக்கப்பட்டுள்ளது) உள்ளது.

1990 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ டெலோசை உலகப் பாரம்பரியக் களமாக பட்டியில் இட்டுள்ளது. இது "விதிவிலக்காக விரிவான மற்றும் பலபொருட்கள் கொண்ட" தொல்லியல் தளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு

பண்டைய கிரேக்கம்

டெலோஸ் தீவு, கார்ல் அன்டன் ஜோசப் ரோட்மேன், 1847
அரங்கம்
சிங்கங்களின் அடுக்கு மேடை

இத்தீவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல் குடியிருப்புகளை ஆய்வு செய்ததில், இங்கு கிமு 3 ஆயிரமாண்டு முதல் மக்கள் வாழ்ந்ததாக அறியவருகிறது. பண்டைய வரலாற்றாளரான துசிடிடீஸ் தீவின் பூர்வீக குடிகளை கடல் கொள்ளையர்களான கேரியன்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் இறுதியில் கிரீட்டின் மன்னர் மினோசால் வெளியேற்றப்பட்டனர். ஒடிசி நூலின் மூலம், இத்தீவு ஏற்கனவே இரட்டைக் கடவுள்களான அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு ஆகியோரின் பிறப்பிடமாக அறியப்பட்டது (ஆர்ட்டெமிசின் பிறப்பிடம் டெலோஸ் அல்லது ஆர்டிஜியா தீவு என்பதில் சில குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது).

கி.மு. 900 மற்றும் கி.பி 100 க்கு இடையில் டெலோஸ் ஒரு முக்கிய வழிபாட்டு மையமாக இருந்தது. இங்கு டயோனிசசு மற்றும் இரட்டை தெய்வங்களான அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிஸின் தாயான டைட்டனஸ் லெட்டோ ஆகியோர் போற்றப்பட்டனர். இறுதியில் பன்ஹெலெனிக் சமய முக்கியத்துவத்தைப் பெற்ற டெலோஸ் துவக்கத்தில் அயோனியர்களுக்கு ஒரு சமய யாத்திரை தலமாக இருந்தது.

ஏதென்ஸ் நகர அரசால் பல "தூய்மையாக்கல்" பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தீவை கடவுளின் முறையான வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சியாக இருந்தது. முதலாவதாக இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில், சர்வாதிகாரி பிசிஸ்ட்ராடசால் நடத்தப்பட்டது. அவர் கோயிலிருந்து தென்படும் அனைத்து கல்லறைகளையும் தோண்டியெடுத்து உடல்களை அருகிலுள்ள மற்றொரு தீவுக்கு மாற்ற உத்தரவிட்டார். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பெலோபொன்னேசியன் போரின் 6 வது ஆண்டு மற்றும் டெல்பிக் ஆரக்கிளின் அறிவுறுத்தலின் கீழ், முழு தீவில் உள்ள அனைத்து கல்லறைப் பிணங்களும் அகற்றப்பட்டு தூய்மையாக்கம் செய்யப்பட்டது. தீவின் புனித முக்கியத்துவம் காரணமாக இங்கு யாரும் இறக்கவோ (அல்லது பிறக்கவோ) அனுமதிக்கப்படவில்லை. அதனால் பிரசவிக்கும் தருவாயில் உள்ளவர்களும், இறக்கும் தருவாயில் உளவர்களும் தீவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் வணிகத்தில் இதன் நடுநிலைமையை பாதுகாக்க யாரும் வாரிசு உரிமை கோர முடியாது. இந்த சுத்திகரிப்புக்குப் பிறகு, டெலியன் விளையாட்டுகளின் முதல் ஐந்தாண்டு விழா இங்கு கொண்டாடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தீவின் புனிதத்தன்மையை பாதுகாகும் விதமாக தீவில் இருந்த அனைத்து மக்களும் ஆசியாவில் உள்ள அட்ராமிட்டியத்திற்கு அனுப்பி அகற்றப்பட்டனர்.

கிரேக்க-பாரசீகப் போர்களுக்குப் பிறகு, தீவு கி.மு. 478 இல் நிறுவப்பட்ட டெலியன் கூட்டணியின் (கிரேக்க நகர அரசுகளின் கூட்டமைப்பு) சந்திப்பு அரங்கமாக மாறியது. கோவிலில் மாநாடுகள் நடத்தப்பட்டன (வெளிநாட்டவர்களுக்கும், வெளிநாட்டு தெய்வங்களுக்கான சிற்றாலயங்களுக்கு ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டது). கி.மு. 454 வரை கூட்டணியின் பொது கருவூலம் பெரிக்கிள்ஸ் ஏதென்சுக்கு கொண்டு செல்லும் வரை இங்கும் வைக்கப்பட்டது.

தீவில் உணவு, இழை அல்லது மரம் ஆகியவற்றிற்கான உற்பத்தி திறன் இல்லை. இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு பெரிய தொட்டி மற்றும் நீர் கிணறு குழாய் தொட்டிப் பால அமைப்பு, மற்றும் சுகாதார வடிகால் மூலம் கட்டுபடுத்தபட்ட முறையைக் கொண்டு நீர் எடுக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் அகோராக்கள் (சந்தைகள்) இயங்கின.

குறிப்புகள்

  1. The combination -nth- is a marker for Pre-Greek words: Corinth, menthos, labyrinth, etc. A name Artemis and even Diana retained was Cynthia.
  2. whc.unesco.org
  3. Thucydides, I,8.
  4. Thucydides, III,104.
  5. Thucydides, V,1.
  6. Thucydides, I,96.