பாக்கித்தான் பொருளாதாரம் | |
---|---|
நாணயம் | பாக்கித்தானிய ரூபாய் (PKR)Rs.1 = 100 பைசாக்கள் |
நிதி ஆண்டு | 1 சூலை – 30 சூன் |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | பொருளியல் கூட்டுறவு அமைப்பு, தெற்காசிய கட்டற்ற வணிகப் பகுதி (SAFTA), தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உலக அறிவுசார் சொத்து நிறுவனம், உலக வணிக அமைப்பு |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $288 பில்லியன் (பெயரளவு, 2015) $928 பில்லியன் (PPP, 2014) |
மொ.உ.உ வளர்ச்சி | 4.24%(2014) |
நபர்வரி மொ.உ.உ | $1,513 (nominal)$4,993 (PPP; 133வது; 2015) |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 25.1%, தொழில்: 21.3%, சேவைகள்: 53.6% (2014 மதிப்பீடு.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 1.8% (சூலை 2015) |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 43%, கட்டுமானம்: 15.2%, உற்பத்தி: 13.3%, மொத்தம் மற்றும் சில்லறை வணிகம்: 9.2%, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்: 7.3% (2012–13) |
வேலையின்மை | 6.6% (2013 மதிப்பீடு.) |
முக்கிய தொழில்துறை | துணி & உடை, உணவு பதப்படுத்துதல், மருந்து, கட்டுமானப் பொருட்கள், வேதிப்பொருள், சீமைக்காரை, சுரங்கத் தொழில், எந்திரத் தொகுதி, எஃகு, பொறியியல், மென்பொருள் மற்றும் வன்பொருள், தானுந்து, விசையுந்து மற்றும் தானிப் பாகங்கள், மின்னணுவியல், தாள் பொருட்கள், உரம், இறால், பாதுகாப்பு சாதனங்கள், கப்பல் கட்டுதல் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 104வது (2015) |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | மொத்தம் $30.414 பில்லியன் (2013-14 மதிப்பீடு.), சரக்குகள் $25.157 பில்லியன், சேவைகள் $5.256 பில்லியன் |
ஏற்றுமதிப் பொருட்கள் | லினன்கள் (10%) பருத்தியும் நூலிழையும் (9.2%) நெல் (7.9%) தைக்கப்படா ஆடவர் உடைகள் (4.3%) சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் (3.2%) சிமென்ட் (2.3%) |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | United States 13.3% China 10.9% United Arab Emirates 8.6% Afghanistan 8.5% Germany 5.1% |
இறக்குமதி | $41.668 பில்லியன் (2013-14 மதிப்பீடு.) |
இறக்குமதிப் பொருட்கள் | உணவு $4.15 பில்லியன் எந்திரத் தொகுதி $5.05 பில்லியன் போக்குவரத்து வண்டிகள் $1.66 பில்லியன் துணி $2.29 பில்லியன் உரங்களும் வேதிப்பொருட்களும் $6.86 பில்லியன் கச்சா உலோகம் $2.7 பில்லியன் சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் $9.02 பில்லியன் கச்சா பெட்றோலியம்=$5.75 பில்லியன் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | China 17% United Arab Emirates 15% Kuwait 8.8% (2012 மதிப்பீடு.) Saudi Arabia 8.5% Malaysia 4.8% |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | 61.8% of GDP (2014-15) |
வருவாய் | 14.8% of GDP, Pkr 4.119 டிரில்லியன் அல்லது $40 பில்லியன் |
செலவினங்கள் | 19.5% of GDP, Pkr 5.412 டிரில்லியன் அல்லது $54 பில்லியன் |
கடன் மதிப்பீடு | இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு: B- (உள்நாட்டு) B- (வெளிநாட்டு) B- (T&C Assessment) எதிர்காலம்: நேர்மறை மூடி: B3 எதிர்காலம்: நிலைத்த |
அந்நியச் செலாவணி கையிருப்பு | $19 பில்லியன் (சூலை 2015) |
Main data source: CIA World Fact Book ' |
பாக்கித்தானின் பொருளாதாரம் (economy of Pakistan) உலகில் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 26ஆவது பெரிய பொருளாதாரமாகும்; இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திப்படி 38வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் 6வது-பெரிய மக்கள்தொகை உடைய நாடு ஆகும். இதன் ஆள்வீத மொ.தே.உ $4,993 ஆகவுள்ளது; இதனடிப்படையில் உலகில் 133வதாகவும் விளங்குகின்றது. பாக்கித்தானின் முறைசாரா பொருளாதாரம் மொத்தப் பொருளாதாரத்தில் 36%ஆக உருப்பதாக மதிப்பிடப்படுகின்றது;இது ஆள்வீத வருமானத்தில் கண்ணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக பாக்கித்தான் உள்ளது. 21ஆவது நூற்றாண்டில் உலகின் பெரிய பொருளாதாரங்களாக வளரக்கூடியதாக பிரிக் நாடுகள் உடன் அடையாளப்படுத்தப்படும் அடுத்த பதினொன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் பல்லாண்டுகளாக போரிலும் சமூக நிலையற்றத்தன்மையாலும் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி தொடருந்துப் போக்குவரத்து, மின்னனாக்கம் போன்ற அடிப்படைச் சேவைகளில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன. பகுதியாக தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் சிந்து ஆற்றை ஒட்டி வளர்ந்துள்ளது. முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக துணிகள், தோற் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் தரைவிரிப்புக்கள்/கம்பளங்கள் உள்ளன.
பாக்கித்தானின் பொருளியல் வளர்ச்சி சிந்து ஆற்றை ஒட்டியே உள்ளது; கராச்சியும் பஞ்சாபின் முக்கிய நகரங்களும் பொருளாதாரத்தின் அச்சுக்களாக உள்ளன. உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வளரும் மக்கள்தொகை, நிலையற்ற வெளிநாட்டு மூலதனம் போன்றவற்றால் கடந்த காலங்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் பாக்கித்தானிய பணியாட்கள் அனுப்பும் தொகைகளால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு நன்றாக இருப்பினும் வளர்ந்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது; இது உடனடியான எதிர்காலத்தில் மொ.தே.உற்பத்தியை பாதிக்கலாம். பாக்கித்தான் தற்போது பொருளாதார தாராயமயமாக்கலையும் அனைத்து அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கலையும் முன்னெடுத்து வருகின்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் முயன்று வருகின்றது. 2014இல், அந்நியச் செலாவணி சேமிப்பு $18.4 பில்லியனைக் கடந்தது. இதனால் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு தொலைநோக்கு மதிப்பீடு நிலையானது என அறிவித்துள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)