பிரின்சு | |
---|---|
2008ஆம் ஆண்டு கோயெச்செல்லா விழாவில் நிகழ்த்தும்போது | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பிரின்சு ரோஜர்சு நெல்சன் |
பிற பெயர்கள் | |
பிறப்பு | மினியாப்பொலிஸ், மின்னசோட்டா, ஐ.அ | சூன் 7, 1958
இறப்பு | ஏப்ரல் 21, 2016 சான்காசன், மின்னசோட்டா, ஐ.அ | (அகவை 57)
இசை வடிவங்கள் | |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1976–2016 |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் |
|
பிரின்சு ரோஜர்சு நெல்சன் (Prince Rogers Nelson, சூன் 7, 1958 – ஏப்ரல் 21, 2016), பரவலாக பிரின்சு என்றே அறியப்பட்ட இந்த அமெரிக்க பாடகர், பாடலாசிரியராகவும், பல்வகை இசைக்கருவி கலைஞராகவும், இசைத்தட்டு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமது திறமையைக் காட்டியுள்ளார். இசையில் புதுமைப் புனைவாளரான பிரின்சு மேடையில் அவரது துடிப்புமிக்க, அட்டகாசமான நடத்தைக்காகவும் மதிப்புமிகு உடைகளுக்காகவும் அபரிமித ஒப்பனைகளுக்காகவும் அறியப்பட்டவர். இவரது குரல்வளம் விரிவான வீச்சைக் கொண்டது. வன்கு இசை, ராக் இசை, ரிதம் அண்ட் புளூஸ், உள்ளுணர்வு இசை, மாயத்தோற்ற இசை, பரப்பிசை என பல்வகைப் பாணிகளையும் உள்ளடக்கியது. உலகெங்கும் இவரது இசைத்தட்டுக்கள் 100 மில்லியனுக்கும் கூடுதலாக விற்பனையாயுள்ளன; அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த கலைஞர்களில் ஒருவராக விளங்கினார். பிரின்சு ஏழு கிராமி விருதுகளையும் கோல்டன் குளோப் விருது ஒன்றையும்அகாதமி விருது ஒன்றையும் வென்றுள்ளார். 2004இல் ராக் அண்டு ரோல் புகழ் மண்டபத்தில் இடம் பெற்றார்]].
பிரின்சு மினியாப்பொலிசில் பிறந்தார். இளம் அகவையிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தார். 18ஆம் அகவையிலேயே வார்னர் பிரதர்சு நிறுவனத்தில் ஒப்பந்தப் பாடகரானார். 1978இல் ஃபார் யூ என்ற தனது இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1979இல் வெளியான இவரது இசைத்தொகுப்பு பிரின்சு விற்பனையில் பிளாட்டினம் நிலையை எட்டியது. அடுத்த மூன்று தொகுப்புகளும்—டர்ட்டி மைண்டு (1980), கண்ட்ரோவர்சி (1981), மற்றும் 1999 (1982)—தொடர்ந்து வெற்றி கண்டன. 1984இல், தனது பின்னணி இசைக்குழுவை தி ரெவலூசன் என அழைத்தார்.
1990களின் துவக்கத்தில், பிரின்சிற்கும் வார்னர் பிரதர்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. 1993இல் தமது இசைக்குழுவின் பெயரை உச்சரிக்கவியலா சின்னம் வடிவில், , பெயரிட்டார். 1994க்கும் 1996க்கும் இடையே ஐந்து தொகுப்புக்களை வெளியிட்டார். 2000களில் மீண்டும் "பிரின்சு" என்றே குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் 16 இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது இறுதி தொகுப்பாக ஹிட் அன்ரண் பேசு டூ, திசம்பர் 11, 2015இல் டைடல் ஓடைச்சேவை மூலமாக வெளியானது. ஏப்ரல் 21, 2016இல் 57ஆம் அகவையில் சான்காசன், மின்னசோட்டாவின் பய்சுலே பார்க் பகுதியில் ஒலிப்பதிவு மையமாகவும் விளங்கிய இல்லத்தில் மறைந்தார்; மரணத்திற்கு முந்தைய இருவாரங்களாக அவருக்கு இன்ஃபுளுவென்சா-போன்ற நோயறிகுறிகள் இருந்தன.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)