பிளேடு ரன்னர் Blade Runner | |
---|---|
பிளேடு ரன்னரின் சுவரொட்டி | |
இயக்கம் | ரிட்லி சுகாட் |
தயாரிப்பு | மைக்கேல் டீலி |
திரைக்கதை |
|
இசை | வான்செலிசு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜோர்டன் குரொனன்வெத் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | சூன் 25, 1982 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா Hong Kong |
ஆக்கச்செலவு | $30 மில்லியன் |
மொத்த வருவாய் | $41.5 மில்லியன் |
பிளேடு ரன்னர் (ஆங்கிலம்: Blade Runner) 1982 ஆம் ஆண்டு ஒரு அறிபுனைத் திரைப்படம் ஆகும். ரிட்லி சுகாட்டினால் இயக்கப்பட்டது. ஹாரிசன் போர்ட், இரட்கர் ஹாவுவர், சான் யங், மற்றும் எட்வர்டு ஒல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருங்காலத்து 2019 லாஸ் ஏஞ்சலஸ் மாநகரத்தில் அமையப்பெறுகிறது. இந்தக் காலகட்டத்தில், விண்வெளிக் குடியிருப்புகளில் பணி செய்ய செயற்கையான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவற்றில் சில செயற்கை மனிதர்கள் புவியிற்கு தப்பித்து மனிதர்களாய் வாழ்கின்றனர். காவலர் ரிக் டெக்கர்டிற்கு (ஃபோர்டு) இவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணி வழங்கப்படுகிறது. ஆனால் இவர் தயக்கம் காட்டுகிறார்.
இத்திரைப்படம் முதலில் அதிகம் வருவாய் ஈட்டவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் கதையின் சிக்கல்கள் மட்டும் திரைவண்ணங்களை புகழ்ந்தனர். வெறு சிலர் திரைப்படத்தின் குறைந்த வேகத்தினையும் குறைந்த சண்டைக் காட்சிகளையும் கடுமையாக விமர்சித்தனர். வருடங்கள் பிறகே பெரிதும் பாராட்டப்பட்டு, இவ்வகையான திரைப்படங்களிற்கு முன்மாதிரியாக மாறியது.
இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பிளேடு ரன்னர் 2049 அக்டோபர் 2017 இல் வெளிவந்தது.
பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் இயக்குநரின் வெட்டு வெளியிடப்பட்டது. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, வார்னர் புரோஸ். பிளேடு ரன்னரின் இறுதி வெட்டினை வெளியிட்டது. இயக்குனர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.
இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு. பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார். ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், சான் கானரி, ஜாக் நிக்கல்சன், பால் நியூமன், கிளின்ட் ஈஸ்ட்வுட், டாம்மி லீ ஜோன்சு, ஆர்னோல்டு சுவார்செனேகர், அல் பசீனோ மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.
பிளேடு ரன்னர் திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
சாரியட்ஸ் ஆப் பயர் திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு ஆசுக்கர் விருதினை வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிளேடு ரன்னர் திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது. அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர். சில நுட்பங்கள் குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.
பிளேடு ரன்னர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு, அதில் சிலவற்றினையும் வென்றது.
ஆண்டு | விருது | பிரிவு | முடிவு |
---|---|---|---|
1982 | லாஸ் ஏஞ்சலசு திரைப்பட விமர்சகர்கள் குழுமம் | சிறந்த ஒளிப்பதிவு | வெற்றி |
1983 | பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் | சிறந்த ஒளிப்பதிவு | வெற்றி |
சிறந்த உடை அமைப்பு | வெற்றி | ||
சிறந்த தொகுப்பு | பரிந்துரை | ||
சிறந்த இசை | பரிந்துரை | ||
சிறந்த ஒப்பனை | பரிந்துரை | ||
சிறந்த தயாரிப்பு | வெற்றி | ||
சிறந்த ஒலி | பரிந்துரை | ||
சிறந்த திரை வண்ணங்கள் | பரிந்துரை | ||
ஹியூகோ விருது | சிறந்த நாடகப்படம் | வெற்றி | |
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் குழு | சிறப்பு விருது | வெற்றி | |
கோல்டன் குளோப் விருதுகள் | சிறந்த அசல் இசை | பரிந்துரை | |
அகாதமி விருது | சிறந்த தயாரிப்பு | பரிந்துரை | |
சிறந்த திரை வண்ணங்கள் | பரிந்துரை | ||
சனி விருதுகள் | சிறந்த இயக்குனர் | பரிந்துரை | |
சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம் | பரிந்துரை | ||
சிறந்த திரைவண்ணங்கள் | பரிந்துரை | ||
சிறந்த துணை நடிகர் | பரிந்துரை | ||
பேன்டாசுபோர்டோ | சர்வதேச திரைப்பட விருது | பரிந்துரை | |
1993 | பேன்டாசுபோர்டோ | சர்வதேச திரைப்பட விருது | பரிந்துரை |
1994 | சனி விருதுகள் | சிறந்த காணொளி வெளியீடு | பரிந்துரை |
2008 | சிறந்த காணொளி வெளியீடு | வெற்றி |
பல்வேறு சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது,
ஆண்டு | வழங்கியவர் | பட்டியல் | இடம் | மேற். |
---|---|---|---|---|
2001 | தி வில்லேஜ் வாய்சு | இருபதாம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்கள் | 94 | |
2002 | OFCS | கடந்த 100 ஆண்டிகளின் சிறந்த 100 அறிவிய புனைவுத் திரைப்படங்கள் | 2 | |
சைட் & சவுண்டு | 2002 பட்டியல் | 45 | ||
50 கிளாசிக்கர், பிலிம் | இல்லை | |||
2003 | இறப்பதற்கு முன் பார்க்கவேண்டிய 1001 திரைப்படங்கள் | |||
என்டர்டெயின்மெண்ட் வீக்லி | தீவிர இரசிகர்கள் கொண்ட சிறந்த 50 திரைப்படங்கள் | 9 | ||
2004 | தி கார்டியன், அறிவியலாளர்கள் | அனைத்து காலத்து சிறந்த 10 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | |
2005 | டோட்டல் பிலிம் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | 47 | |
டைம் இதழின் விமர்சகர்கள் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | இல்லை | ||
2008 | நியூ சயின்டிசுடு | அனைத்து காலத்து சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | |
எம்பையர் | அனைத்து காலத்து சிறந்த 500 திரைப்படங்கள் | 20 | ||
2010 | ஐஜிஎன் | அனைத்து காலத்து சிறந்த 25 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | |
டோட்டல் பிலிம் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | இல்லை | ||
2012 | சைட் & சவுண்டு' | 2012 விமர்சகர்கள் - சிறந்த 250 திரைப்படங்கள் | 69 | |
சைட் & சவுண்டு' | 2012 இயக்குனர்கள் - சிறந்த 100 திரைப்படங்கள் | 67 | ||
2017 | எம்பையர் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | 13 |
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |archive-date=
(help)
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: Check date values in: |access-date=
(help)[self-published source]
{{citation}}
: Check date values in: |access-date=
(help)
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)
{{citation}}
: Check date values in: |access-date=
(help)
{{citation}}
: Check date values in: |date=
(help)
{{citation}}
: Check date values in: |date=
(help)
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: Check date values in: |access-date=
(help)
{{citation}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)