பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4(Angiosperm Phylogeny Group IV system (APG IV system)) என்பது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் என்ற முறைசாரா பன்னாட்டு தாவர வகைப்பாட்டியல் அறிஞர் குழும முறைமையின் நான்காம் பதிப்பு ஆகும். இவர்கள் உலகிலுள்ள பூக்குந்தாவரங்களுக்காக பரிணாம மரபு வழிமுறைகளையும், கணியவழித் தீர்வுகளையும் கொண்டு, ஒருமித்த எண்ணத்துடன், வகைப்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்கி, பன்னாட்டு வகைபாட்டியல் முறைமையை அமைக்கின்றனர். இந்த நான்காம் பதிப்புக்கு முன், மூன்று பதிப்புகள் (1998, 2003, 2009, ) வந்துள்ளது. இம்மூன்று பதிப்புகளின் செம்பதிப்பான நான்கவது பதிப்பு, 2016 ஆம் ஆண்டு வெளிவந்து, இப்பொழுதும் பன்னாட்டு தாவரவியலாளர்களால் பின்பற்றப்படுகிறது. இதன் முழு ஆவணத்தினையும் இணையநூலகத்தில் பதிவிறக்கிப் படிக்க இயலும்.இப்பதிப்பு மூலக்கூறு மரபியல் (Molecular phylogenetics based) சார்ந்த,தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இம்முறைமையின் கீழ், 64 வரிசைகள் , 420 குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில சிறிய குடும்பங்கள் விலக்கப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்தும் கனிக இனமரபின உருமணிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் (PPA-Plastid Pylogenomic Angiosperm) கட்டமைக்கப்பட்டுள்ளன. APG III அமைப்புடன் ஒப்பிடும்போது, APG IV அமைப்பு ஐந்து புதிய வரிசைகளை ஏற்படுத்தியுள்ளது. அவை, போராஜினேல்ஸ் , டில்லெனியேல்ஸ் , இகாசினேல்ஸ் , மெட்டெனியலேஸ், வஹ்லியால்ஸ் ஆகும். அதே போல புதிய குடும்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
பூக்குந்தாவர மரபுத் தோற்ற கிளைப்படம்
இக்குழுமத்தின் முந்தையை முறைமைகளைப் போலவே, தாவர பரிணாமவியல், மரபியல், வகைப்பாட்டியல் அடிப்படைகளைக் கொண்டு, கணினியின் தானியக்கமுறையில் மரபின கிளைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் இருந்து, மறுசீராய்வு செய்த கீழ்கண்டத்தரவு தரப்பட்டுள்ளது.
↑Angiosperm Phylogeny Group (2009), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III", Botanical Journal of the Linnean Society, 161 (2): 105–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1095-8339.2009.00996.x