பெட்டி ஃப்ரீடன் | |
---|---|
1960இல் பெட்டி பிரீடன் | |
பிறப்பு | பெட்டி நவோமி கோல்டுசுட்டீன் பெப்ரவரி 4, 1921 பியோரியா, இலினொய், அமெரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 4, 2006 வாசிங்டன், அமெரிக்கா | (அகவை 85)
இறப்பிற்கான காரணம் | குருதித்தேக்க இதயத் திறனிழப்பு |
தேசியம் | அமெரிக்கர் |
அறியப்படுவது | பெண்ணியம், அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராட்டம் |
வாழ்க்கைத் துணை | கார்ல் பிரீடன் (1947–69; மணமுறிவு) |
பெட்டி பிரீடன் (அ) பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan, பெப்ரவரி 4, 1921 – பெப்ரவரி 4, 2006) அமெரிக்க எழுத்தாளரும் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும், அமெரிக்காவின் பெண்கள் விடுதலைப் போராட்டத்தைத் துவக்கியவர்களில் ஒருவரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் மகளிர் இயக்கத்தில் முன்னணி வகித்தார். 1966 இல் பெண்களுக்கான தேசிய சமூகத்தை அமெரிக்காவில் துவக்கியவர்.. 1963இல் அவர் எழுதிய ’பெண்மை வட்டம்’ (தி பெமினைன் மிஸ்டிக்) என்ற நூல் 20வது நூற்றாண்டில் இரண்டாம் அலை வீசக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.
1966இல், பிரீடன் மகளிருக்கான தேசிய அமைப்பை (NOW) நிறுவி அதன் முதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் நோக்கம் பெண்களை " இப்போது பெரும்போக்கு அமெரிக்க சமூகத்தில் ஆண்களுக்கு முழுவதும் சரிசமனான பங்காளியாக" கொண்டுவருவதாகும். பெட்டி பிரீடன் தனது செயற்பாடுகளுக்காகப் பல விருதுகளும் பெற்றவர்.
1981 ஆம் ஆண்டில் வெளியான ’இரண்டாவது கட்டம்’ எனும் இவரது புத்தகம் இருபது ஆண்டுகளாக நடந்து வந்த பெண்கள் போராட்டத்தின் விளைவுகளை ஆராய்ந்தது. சமுதாய, பொருளாதார மாற்றங்கள் மட்டுமே அப்போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது என்றும் தன்மானமும் தனித்தன்மையும் ஏற்படவில்லை என்றும் அதற்கு பதில் குடும்பப் பிரச்சனைகள், குழந்தைகள் புறக்கணிப்பு ஆகியவையே நடந்துள்ளன என்றும் அன்பின் குறைவால் குடும்பங்கள் தவிக்கின்றன இந்நூலில் பெட்டி ஃப்ரீடன் குறிப்பிடுகின்றார்.
இரண்டாவது கட்டம் நூலில், ’பெண்கள் போராட்டத்தின் இந்த பிடிவாதமான, தன்னலம் மிக்க சண்டைகளால், வார்த்தை ஜாலங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன்..என்னை விட்டுப் பிரியாத ஓர் இனம் புரியாத சஞ்சலத்தால் சிரமப்படுகிறேன்’ என்று தமது மனநிலையை குறிப்பிடுகின்றார்.
பிரீடன் 1947இல் கார்ல் பிரீடனை திருமணம் புரிந்தார். தனது 86 வது அகவையில் இதயத் திறனிழப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.