மாணவர் (Student) என்பவர் முதன்மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஒருவரைக் குறிப்பதாகும்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில், "மாணவர்" என்பது மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்புகளில் (எ.கா., கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ) சேர்ந்தவர்களைக் குறிக்கிறது; ஆரம்ப/தொடக்கப் பள்ளிகளில் சேருபவர்களும் "மாணவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆசியா
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் ஆறு வருட ஆரம்பப் பள்ளிக் கல்வி கட்டாயமாகும்.
தொடக்கப்பள்ளி (தொடக்க 1 முதல் 6 வரை)
மேல்நிலைப் பள்ளி (இரண்டாம் நிலை 1 முதல் 4 அல்லது 5 வரை)
இளையோர் கல்லூரி (இளையோர் கல்லூரி 1 முதல் 2 வரை - விருப்பத்திற்குரியது) அல்லது பாலிடெக்னிக் (3 ஆண்டுகள் - விருப்பத்திற்குரியது)