நிஜத்தில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பை மிகுவித்த மெய்ந்நிலை (Augmented Reality) எனலாம். இந்த நுட்ப அமைப்புக்கு கணினியியல் தொழில் நுட்பங்களே அடிப்படை. மிகுவித்த மெய்ந்நிலை அமைப்புக்கு மூன்று அம்சங்கள் அவசியமாக கருதப்படுகின்றது, அவை:
தலையில் அணியக்கூடிய காட்சி சாதனம்
நிகழ் நேர தட தொடரி
நடமாடும் கணிமை வசதி
மிகுவித்த மெய்ந்நிலைப் பயன்பாடுகள்
ஒரு பொருளை திருத்தும்பொழுது நிகழ்நேரத்தில் பொருட்களை அடையாளங்காட்டி, செய்முறைகளை அறிவித்து வழிகாட்ட உதவுதல்