மேய்ச்சல் வாழ்க்கை முறை

சகார் மகால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் பக்தியாரி மக்களின் ஒரு கூடாரம், ஈரான்.
மேய்ச்சல் வாழ்க்கை முறையின் உலக வரைபடம். இதன் தொடக்கமும், வரலாற்று ரீதியிலான வளர்ச்சியும்

மேய்ச்சல் வாழ்க்கை முறை என்பது கால்நடை வளர்ப்பின் ஒரு வகையாகும். இதில் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள் ("கால்நடை" என்று அறியப்படுபவை) ஒரு பெரிய தாவர வளர்ச்சியுடைய வெளிப்புற நிலங்களுக்கு (மேய்ச்சல் நிலங்கள்) மேச்சலுக்காக அழித்துவிடப்படுகின்றன. வரலாற்று ரீதியாக தங்களது மந்தைகளுடன் இடம்பெயரும் நாடோடி மக்கள் இம்முறையைப் பின்பற்றினர். அவர்கள் வளர்க்கும் விலங்கு இனங்கள் மாடுகள், ஒட்டகங்கள், ஆடுகள், வளர்ப்பு யாக்குகள், இலாமாக்கள், துருவ மான்கள், குதிரைகள் மற்றும் செம்மறியாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

மேய்ச்சல் வாழ்க்கை முறையானது பல வேறுபாடுகளுடன் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. வறண்ட நிலை, மண் வளமற்ற தன்மை, குளிர்ந்த அல்லது வெப்பமான நிலங்கள், பயிர் வளர்ச்சியைக் கடினமாக்கும் அல்லது வளர்ச்சியற்றதாக்கும் நிலை, நீரற்ற தன்மை போன்ற சூழ்நிலைக் காரணிகள் பொதுவாக இதற்கு வித்திடுகின்றன. மிகக் குறைவான நிலங்களில் மிகுந்த அளவுக்கு மட்டு மீறிய சூழ்நிலை அமைப்புகளில் வாழும் மேய்ச்சல் வாழ்க்கை முறைச் சமூகங்கள் புவி சூடாதலின் விளைவுகளுக்கு மிகுந்த பலவீனமாயானவையாக உள்ளன.

ஆப்பிரிக்கா, திபெத்திய பீடபூமி, யுரேசியப் புல்வெளி, அந்தீசு மலைத்தொடர், படகோனியா, பாம்பாசுப் புல்வெளி, ஆத்திரேலியா மற்றும் பல பிற இடங்கள் உள்ளிட்ட பல புவியியல் பகுதிகளில் மேய்ச்சல் வாழ்க்கை முறையானது ஒரு வாழ்க்கை முறையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. 2019ஆம் ஆண்டில் 20 மற்றும் 50 கோடிக்கு இடைப்பட்ட மக்கள் உலகளவில் மேய்ச்சல் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். உலக நாடுகளில் 75% நாடுகள் மேய்ச்சல் வாழ்க்கை முறைச் சமூகங்களைக் கொண்டுள்ளன.

மேலும் காண்க

உசாத்துணை

  1. Stephens, Lucas; Fuller, Dorian; Boivin, Nicole; Rick, Torben; Gauthier, Nicolas; Kay, Andrea; Marwick, Ben; Armstrong, Chelsey Geralda et al. (2019-08-30). "Archaeological assessment reveals Earth's early transformation through land use" (in en). Science 365 (6456): 897–902. doi:10.1126/science.aax1192. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31467217. Bibcode: 2019Sci...365..897S. 
  2. Kerven, Carol; Robinson, Sarah; Behnke, Roy (2021). "Pastoralism at Scale on the Kazakh Rangelands: From Clans to Workers to Ranchers". Frontiers in Sustainable Food Systems 4. doi:10.3389/fsufs.2020.590401. பன்னாட்டுத் தர தொடர் எண்:2571-581X. 
  3. www.coursehero.com https://www.coursehero.com/tutors-problems/History-Other/36527644-Microculture-Foraging-Characteristics-of-livelihood/. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. "Oxford Bibliographies: Ecology". Oxford Bibliographies. (2018-11-29). DOI:10.1093/obo/9780199830060-0207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199830060. 
  5. 5.0 5.1 Mbow, C.; Rosenzweig, C.; Barioni, L. G.; Benton, T. et al. (2019). "Chapter 5: Food Security". IPCC SRCCL. பக். 439–442. https://www.ipcc.ch/site/assets/uploads/sites/4/2019/11/08_Chapter-5.pdf.