லெஷ்மேனியாசிஸ்

லெஷ்மேனியாசிஸ்
Cutaneous leishmaniasis in the hand of a நடு அமெரிக்காn adult
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B55.
ஐ.சி.டி.-9085
நோய்களின் தரவுத்தளம்3266 29171 3266 7070
மெரிசின்பிளசு001386
ஈமெடிசின்emerg/296
பேசியண்ட் ஐ.இலெஷ்மேனியாசிஸ்
ம.பா.தD007896

லெஷ்மேனியாசிஸ் (Leishmaniasis) அல்லது லெஷ்மேனியோசிஸ் என்பது ஒரு நோய்; இது ஏற்படக் காரணம் லெஷ்மேனியா என்ற பேரினத்தைச் சேர்ந்த ஓரணு ஒட்டுண்ணி ஆகும். சில குறிப்பிட்ட வகையான மண் ஈக்கள் கடிப்பதன் மூலம் இது பரவுகிறது. இந்த நோய் சருமத்தில், சளியில் அல்லது உள்ளுறுப்பில் என மூன்று முக்கிய வழிகளில் காணப்படலாம். சரும வடிவிலானது சருமப் புண்களாகக் காணப்படலாம்; சளி வடிவிலானது சருமம், வாய், மற்றும் மூக்கில் தோன்றும் புண்களாகக் காணப்படலாம்; உள்ளுறுப்பு வடிவிலானது சருமப் புண்களாகத் தொடங்கி பின்னர் காய்ச்சல், குறைந்தளவு சிகப்பு இரத்த அணுக்கள் மற்றும் விரிவடைந்த மண்ணீரல், விரிவடைந்த கல்லீரலாக மாறலாம்.

மனிதர்களில் தோன்றும் தொற்றுகள் 20க்கும் மேற்பட்ட லெஷ்மேனியா இனத்தினால் ஏற்படுகிறது. இதற்கான எச்சரிக்கைக் காரணிகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: ஏழ்மை, ஊட்டச்சத்து இன்மை, காடுகளை அழித்தல், மற்றும் நகரமயமாக்கல். மேற்கூறிய மூன்று வகை நோய்களையும் மைக்ரோஸ்கோப் வழியே இந்த ஒட்டுணிகளைக் காண்பதன் மூலம் கண்டறியப்படலாம். மேலும், உள்ளுறுப்பு நோயானது இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படலாம்.

பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட வலைகளின் கீழ் தூங்குவதன் மூலம் லெஷ்மேனியாசிஸ் ஓரளவு தடுக்கப்படலாம். மண் ஈக்களைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளை அடித்தல், மற்றும் இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்க இந்நோய் கண்டவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தல் போன்றவை வேறு வழிமுறைகளாகும். இந்நோய் எவ்விடத்திலிருந்து ஏற்பட்டது, "லெஷ்மேனியா"வின் இனம், மற்றும் தொற்றின் வகை ஆகியவற்றைப் பொறுத்து இதற்கான சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது. உள்ளுறுப்பு வகை நோய்க்கான சில சாத்தியமான மருந்துகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: (liposomal amphotericin B), (pentavalent antimonials) மற்றும் (paromomycin) ஆகியவற்றின் கலவை, மற்றும் (miltefosine). சரும நோய்க்கு, பரமோமைசின் (paromomycin), (fluconazole), அல்லது (pentamidine) சிறந்ததாக இருக்கலாம்.

தற்போது சுமார் 98 நாடுகளில்சுமார் 12 மில்லியன் மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும், சுமார் 2 மில்லியன் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்; 20 முதல் 50 ஆயிரம் மரணங்கள் நிகழ்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் வட அமெரிக்கா, மற்றும் தென் ஐரோப்பாவில் உள்ள சுமார் 200 மில்லியன் மக்கள், இந்நோய் பொதுவாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சில மருந்துகளில் உலக சுகாதார நிறுவனம் தள்ளுபடி பெற்றுள்ளது. இந்நோய் நாய்கள் மற்றும் கொறிக்கும் விலங்குகள் உட்பட வேறு பல விலங்குகளிலும் ஏற்படலாம்.

மேற்சான்றுகள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Leishmaniasis Fact sheet N°375". World Health Organization. January 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Barrett, MP; Croft, SL (2012). "Management of trypanosomiasis and leishmaniasis.". British medical bulletin 104: 175–96. doi:10.1093/bmb/lds031. பப்மெட்:23137768. 
  3. 3.0 3.1 Sundar, S; Chakravarty, J (Jan 2013). "Leishmaniasis: an update of current pharmacotherapy.". Expert opinion on pharmacotherapy 14 (1): 53–63. doi:10.1517/14656566.2013.755515. பப்மெட்:23256501. 
  4. Dorlo, TP; Balasegaram, M; Beijnen, JH; de Vries, PJ (Nov 2012). "Miltefosine: a review of its pharmacology and therapeutic efficacy in the treatment of leishmaniasis.". The Journal of antimicrobial chemotherapy 67 (11): 2576–97. doi:10.1093/jac/dks275. பப்மெட்:22833634. 
  5. Minodier, P; Parola, P (May 2007). "Cutaneous leishmaniasistreatment.". Travel medicine and infectious disease 5 (3): 150–8. doi:10.1016/j.tmaid.2006.09.004. பப்மெட்:17448941. 
  6. "Leishmaniasis Magnitude of the problem". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  7. Lozano, R (Dec 15, 2012). "Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010.". Lancet 380 (9859): 2095–128. doi:10.1016/S0140-6736(12)61728-0. பப்மெட்:23245604. 
  8. Ejazi, SA; Ali, N (Jan 2013). "Developments in diagnosis and treatment of visceral leishmaniasis during the last decade and future prospects.". Expert review of anti-infective therapy 11 (1): 79–98. doi:10.1586/eri.12.148. பப்மெட்:23428104.