வாக்லாவ் அவொல் Václav Havel | |
---|---|
செக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 2 பெப்ரவரி 1993 – 2 பெப்ரவரி 2003 | |
பிரதமர் | வாக்லாவ் கிளாஸ் யோசஃப் டோசோவ்ஸ்கி மிலோஸ் செமான் விளாடிமிர் ஸ்பைட்லா |
முன்னையவர் | பதவி உருவானது |
பின்னவர் | வாக்லாவ் கிளாஸ் |
செக்கோஸ்லோவேகியா அதிபர் | |
பதவியில் 29 திசம்பர் 1989 – 20 யூலை 1992 | |
பிரதமர் | மாரியன் கால்ஃபா யான் ஸ்ட்ராஸ்கி |
முன்னையவர் | மாரியன் கால்ஃபா (பொறுப்பு) |
பின்னவர் | யான் ஸ்ட்ராஸ்கி (பொறுப்பு) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிராகா, செக்லோஸ்வேகியா (தற்போதைய செக் குடியரசு) | 5 அக்டோபர் 1936
இறப்பு | 18 திசம்பர் 2011 இராடெசெக், செக் குடியரசு | (அகவை 75)
அரசியல் கட்சி | குடிசார் மன்றம் (1989–1993) ஆதரவு - பசுமைக் கட்சி (செக் குடியரசு) (2004–2011) |
துணைவர்(s) | ஓல்கா ஸ்ப்ளைசலோவா (1964–1996) தாக்மார் வெஸ்க்ர்னோவா (1997–2011) |
முன்னாள் கல்லூரி | செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பிராகா |
கையெழுத்து | |
இணையத்தளம் | www.vaclavhavel.cz www.vaclavhavel-library.org |
வாக்லாவ் அவொல் (ⓘ) (5 அக்டோபர் 1936 – 18 திசம்பர் 2011) ஓர் செக் நாட்டு நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். செக்கோஸ்லோவேகியா நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் (1989–92) புதியதாக உருவான செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகவும் (1993–2003) விளங்கியவர். இவரது 20 நாடகங்களும் பல அபுதினங்களும் பன்னாட்டளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக அறியப்படுகின்றன. இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்தர பதக்கம், பிலடெல்பியா விடுதலை பதக்கம், கனாடா விருது போன்ற பல விருதுகளும் பெருமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய உள்ளுணர்வு மற்றும் பொதுவுடமைக்கான பிராகா சாற்றுரையை வரைந்து ஒப்பமிட்டவர்களில் ஒருவர். தமது இறப்பின்போது நியூயார்க்கைத் தலைநகராகக் கொண்ட மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராக விளங்கினார்.
1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார். இவர் நாட்டின் அதிபராக விளங்கிய பதின்மூன்றாண்டுகளில் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து சிலோவாக்கியா, இவரது எதிர்ப்புகளுக்கு இடையே, பிரிந்து செக் குடியரசு உருவானது. செக் குடியரசு ஓர் பல கட்சி சனநாயக அரசாக மலர பெரிதும் காரணமாக இருந்தார். நாடோவுடன் இணைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சந்திப்புகளை துவக்கினார்; 2004ஆம் ஆண்டு செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாயிற்று.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)